மைக்ரோசாப்ட் பிங், கார்டானா மற்றும் ரிசர்ச், ஒரு புது AI பிரிவாக‌ இணைக்கப்பட‌ உள்ளது

Microsoft created a new artificial intelligence unit by merging Cortana, Bing, its Research group, Ambient Computing and Robotics divisions

மைக்ரோசாப்ட் தனது பிங் (Bing), கார்டானா (Cortana), ரிசர்ச் (Research), சுற்றுப்புற தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரோபோவியல் பிரிவுகளை ( Ambient Computing and Robotics) இணைத்து ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு பிரிவாக‌ உருவாக்க‌ உள்ளது.

மைக்ரோசாப்ட் இன் புதிய பிரிவானது மைக்ரோசாப்ட் AI மற்றும் ஆராய்ச்சி குழு என்றழைக்கப்பட உள்ளது (Microsoft AI and Research Group). ஹாரி ஷூம் (Harry Shum) என்பவர் இதற்கு தலைமை வகிக்க உள்ளார்.

இந்த செயற்கை அறிவுத்திறன் பிரிவானது, மைக்ரோசாப்ட் இன் விண்டோஸ் (Windows), ஆஃபீஸ் (Office), மற்றும் அசூர் (Azure) உடன் சேர்த்து, நான்காவது பொறியியல் குழுவாக‌ உருவெடுக்க‌ உள்ளது.

மைக்ரோசாஃப்ட் இன் கூற்றுபடி ஹாரி ஷூம் (Harry Shum) 5000 ஊழியர்களுக்கு தலைமை வகிக்க உள்ளார்.

சமீப காலமாக‌, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆப்பிளின் இன் சிரி ( Apple’s Siri), கூஃகுள் நௌ (Google Now), மற்றும் அமேசான் அலெக்சா (Amazon’s Alexa) என‌ நிறுவனங்களின் மெய்நிகர் உதவியாளர் (( virtual assistant ) பயன்பாட்டிற்கு போட்டியாக‌ தனது உருவாக்கத்தினை மெருகேற்றி வருகின்றது.

அண்மையில், சியனொஜென் (Cyanogen) தனது சியனொஜென் ஓஎஸ் 13.1 (Cyanogen OS 13.1) இயங்குதளம் நிறுவப்பட்ட‌ ஒன் பிளஸ் ஒன் கருவிகொண்ட‌ (OnePlus One in India) பயனர்களுக்கு மைக்ரோசாப்ட் இன் கார்ட்டோனா (Cortana) குரல் உதவி பயன்பாட்டை (Microsoft’s Cortana voice assistant) இந்தியாவில் அறிமுகப்படுத்தியதென்பது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்ச்சி

இனிவரும் காலம் என்பது கணினி கையில்தான் என்று உறுதிபடுத்தும் விதம்தான் நாம் காண்கின்ற‌ அனைத்துமே. ஏனெனில் அனைத்துமே நாம் ஹாலிவுட் படத்தினில் பார்ப்பதைப்போல‌ மனிதன் செயலற்று போவான். இயந்திரங்கள் செயல்படும். ஆனால் இதற்கு துணை நிற்கும் நிறுவனங்கள் ஆட்டிப்படைக்க‌ போகின்றன‌. வேலைவாய்ப்பு என்பது இவர்களின் கைகளில் மட்டுமே. இனி வரவிருக்கும் காலங்களில் க‌டவுள் எனும் சக்தியால் மட்டுமே, ஆறுதலும், நன்மையும் நம்மில் விதைக்க‌ இயலும்.

நாள் : 03.10.2016 திருத்தம் : 04.10.2016

புதியவை / Recent Articles