google-taiwan-data-center
Commerce

The Google is now extending FASTER cable in Japan to Taiwan, which houses Google’s largest data center in the continent.

கூகிள் மற்றும் FASTER கூட்டுச்சங்கத்தின் (FASTER consortium) ஐந்து உறுப்பினர் நிறுவனங்கள், இணைப்பு வேகத்தை அதிகரிக்க, $ 300 மில்லியன் செலவில் 60 Tbps (terabits விநாடிக்கு) ஒளியிழை கேபிளினை (fiber optic undersea cable) ஜப்பான் மற்றும் அமெரிக்க இடையே கடலுக்கடியில் இழுத்து ஏற்பாடு செய்துள்ளன‌.

கூஃகிள் நிறுவனம் ஆசியா முழுவதும் உள்ள‌ வலை பயனர்கள் நன்மைபெற‌ அதன் முயற்சிகளை நீட்டிக்க உள்ளது. ஆசிய‌ கண்டத்திலுள்ள‌ கூகிள் இன் பெரிய தரவு மைய இடமாக விளங்குகிறது, தைவான் (Google’s largest data center in the Asia continent). ஜப்பானிலுள்ள‌ FASTER கூட்டுச்சங்க கேபிளுடன் ஒரு புதிய 26 Tbps கேபிளை கொண்டு தைவானில் இணைக்க உள்ள‌து.

இதனால் ஆசிய‌ பகுதியில் உள்ள‌ பயனர்கள் இன்னும் விரைவில் Gmail, YouTube மற்றும் BigQuery போன்ற‌ கூகிள் அப்ளிகேஷன்களை (Google Applications) உபயோகிக்க‌ முடியும் என‌ கூகிள் நிறுவனம் கூறுகின்றது.