Apple Plans for India, Business
பணம் முதலீடு

Apple's plans for Business in India; India can be the next China for Apple

வளர்ச்சிபெற்ற‌ பொருளாதாரங்கள் (economies), அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை (political and economic crisis) எதிர்கொள்ளும் ஆப்பிள், நிறுவனத்தின் வளர்ச்சியினை பராமரிக்க (maintain growth) கவனம் செலுத்துகின்ற‌ முடிவானது அர்த்தமுள்ளதாகும். ஏற்கனவே ஆப்பிள் சீனாவில் கணிசமான வெற்றி (success in China) அடைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் தனது வர்த்தகத்தினை (business in India) விரிவாக்கம் செய்வதற்கு இதுவரையிலும் எடுத்த‌ முயற்சிகள் அனைத்தும் உள்ளூர் பொருளாதார கொள்கைகளால் தகர்க்கப்பட்டுள்ளன.

ஐபோன் விற்பனை இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஆப்பிள் கால்தளம் பதிக்காத‌, உலகளவில் பெரிய சந்தையாக‌ இந்தியா இருக்கும் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த சீனாவாக‌ மாறும் என்ற‌ நம்பிக்கையில் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உள்ளார்.

முத்திரைபதித்த‌ ஐபோன் விற்பனை உலகளவில் தொடர்ச்சியாக வீழ்ச்சிகண்டுவந்தாலும் ( iPhone fall globally though), இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை ஒரு பிரகாசிக்கும் நட்சத்திரமாகப் பெருகி (shining star for Apple) வருகிறது. இந்தியாவில் முதன்மை சாதனங்களின் (Apples flagship devices sale) விற்பனை செப்டம்பருடன் முடிவடைந்த‌ 12 மாதங்களில் முந்தைய ஆண்டைவிட‌ 50 சதவீதம் அதிகரித்துள்ளன‌ என ஆப்பிள் கூறுகின்றது.

இந்தியாவில் தனது விற்பனையினை வளர்க்கவும்; அதன் செலவுமிக்க‌ ஐபோன்களை வாங்கவும், இன்னும் அதிகமான‌ நுகர்வோரைப் பெறவும், ஆப்பிள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர்ந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கும் கூடும். இந்தியாவில் தனது முதன்மை பொருட்களை தயார் செய்வதற்கான‌ முயற்சியை கடந்த மூன்று வருடங்களாக ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

எனினும் இந்திய‌ நாட்டில் விற்கப்படும் ஆப்பிளின் நுகர்வோர் மின்னணுவியல் பொருட்களின் 30 சதவீத பாகங்களை (கூறுகள் components ) உள்நாட்டில் பெறவேண்டும் என‌ இந்திய அரசாங்கம் கோருகிறது. ஆப்பிளுக்கு பெருத்த‌ சவாலாக‌ விளங்குவது என்னவென்றால் அதன் பெரும்பான்மையான‌ தயாரிப்புகள் சீனாவில் உற்பத்தியாகின்றன‌ (Apple's majority products are manufactured in China.).
.

இதனைக் கருத்தில் கொண்டு ஐபோன் (Apple iPhone) மற்றும் ஐபேட்களை (iPad) இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு தயாராகிவருகின்றது. இப்போது ஆப்பிள் தனது உற்பத்திகளில் சிலவற்றை இந்தியாவில் நகர்த்தவும் (manufacture in India) அதனை செயல்படுத்த பொருத்தமான சலுகைகளைக் கோரி இந்திய அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

ஆப்பிள் இந்தியாவில் தயாரிப்பினைத் துவங்கினால் ஏராளமான இந்தியர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கான‌ வாய்ப்பு உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.