பணம் முதலீடு

Amazon India to launch cricket & showbiz based shows

அமேசான் இந்தியாவின் கிரிக்கெட் மற்றும் திரைத்துறை சார் நிகழ்ச்சிகள். அமேசான் இந்தியா, பவர் ப்ளே (Power Play) என்று அழைக்கப்படும் முதல் நிகழ்ச்சியினை எக்செல் என்டர்டெயின்மென்ட் (Excel Entertainment) உடன் இணைந்து வழங்க‌ உள்ளது. இத்தொடர் கிரிக்கெட் மற்றும் திரைத்துறை (showbiz shows) அடிப்படையில், ஆகஸ்ட் 16 ஆம் நாளிலிருந்து துவங்க‌ உள்ளது.

அமேசான் இந்தியாவின் இந்த‌ நிகழ்ச்சியானது இந்தியாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அதன் பிரைம் (Amazon Prime) மேடையினை அதிக அளவில் பிரபலமாக்கும் இலக்காக விளங்கும் என‌ அமேசான் இந்தியா கூறுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியானது எக்செல் எண்டெர்டெயிண்மெண்ட்யின் முதல் டிஜிட்டல் தொடராக‌ இருக்கும்.

சுவாரஸ்யமாக, கடந்த ஜூலையில், அமேசான் நிறுவனம் $ 100 மில்லியன் முதலீடு செய்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசை அத்துடன் புகைப்படங்கள் என‌ அமேசான் பிரைம் பயனர்களை ஸ்ட்ரீம் செய்து தனது அசல் வீடியோ உள்ளடக்கத்தை வழங்கும் என‌ அமேசான் இந்தியா (Amazon India) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.