நிமிடத்திற்கு 1,000 கேலன்கள் நீர் உறிஞ்சும் கான்கிரீட்

Technology

This ultimate concrete absorbs 1,000 gallons of water per minute

ஆதாரம் டார்மாக் இணையதளம் (Tarmac Website)

பெருமழைக்காலங்களில் அல்ல‌ சிலமணி நேரம் நீடிக்கும் மழைக்கும் நம்மூரில் (குறிப்பாகச் சென்னையில்) வேளியே கால் வைக்க‌ கூட‌ இடமிருக்காது ஏனெனில் அவ்வளவு வெள்ளப்பெருக்கு இருக்கும். காரணம் என்ன‌? கான்கிரீட் (concrete ) ரோடுகள், போதிய‌ குளம் குட்டைகள் இல்லாமையா ? . நகர்புறங்களில் ஏது நீர் தேக்கங்கள் !!. சரி. கான்கிரீட் ரோடுகளை ஒரு காரணமாகக் கொள்வோம். கான்கிரீட் ரோடுகள் நீரை மணலினுள் சென்று நீர் நிலைகளை சென்றடைய‌ அனுமதிப்பதில்லை ஆனாலும் மிகச் சிறிய அள‌வே உறிஞ்சப்படுகிறது.

பிரிட்டனைச் (U.K) சேர்ந்த‌ நிறுவனமான‌ டார்மாக் (Tarmac) ஒரு புதுமையான‌ கண்டுபிடிப்பினை நிகழ்த்தியுள்ளது. இந்நிறுவனம் நிமிடத்திற்கு 1056 கேலன்கள் 1,056 gallons (கிட்டத்தட்ட 4000 லிட்டர்கள்) நீரினை உள்ளே உறிஞ்சி கான்கிரீட்டின் (concrete) இடைவெளிகளில் நீரினைக் வடிய‌ச்செய்யும் ஒரு புதுவகையான‌ கான்கிரீட்டினை கண்டுபிடித்துள்ளது.அதன் பெயர் டாப்மிக்ஸ் (Topmix).

பாரம்பரிய கான்கிரீட் 300 மில்லி மீட்டர் தண்ணீரை மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு உறிஞ்ச‌ முடியும். மாறாக, டாப்மிக்ஸ் (Topmix) எளிதாய் 36,000 மில்லிமீட்டர் தண்ணீரை ஒரு மணி நேரத்தில் உள்கடத்த‌ முடியும். அதிக துவாரங்களையுடைய டாப்மிக்ஸ் கான்கிரீட்டால் பெருமள‌வில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு அதனை நேராக‌ நிலத்தில் செலுத்தவோ அல்லது அதனை சாக்கடைகளில் பாய்ச்சவோ அல்லது மழை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தேக்கவோ முடியும். மேலும் இந்த‌ நீரினை கலன்களில் சேமித்து கழிவு நீர் பயன்பாட்டிற்காகவோ அல்லது நீர்ப்பாசனத்திற்கோ பயன்படுத்தமுடியும். இந்த‌ முடிவானது நகராட்சியினைப் பொறுத்தது என்பது டார்மாக் நிறுவனத்தின் கூற்று.

டாப்மிக்ஸ் (Topmix) கான்கிரீட் (concrete ) யுகே யில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் டார்மாக் நடத்திய‌ சோதனையில் இந்த‌ கான்கிரீட் அதிக‌ குளிரான‌ இடங்களிலோ அல்லது அதிக‌ டிராஃபிக் உள்ள‌ இடங்களுக்காகவோ தயார்செய்யப்படவில்லை என்றும் பரிந்துரை செய்துள்ளது. சில‌ நாட்களில் நம்மூரிலும் இவ்வகை கான்கிரீட் வந்தடையும் என‌ எதிர்பார்க்கலாம்.

Below Image Copyright : Tarmac Group, U.K, www.tarmac.com..

நாள் : 01.10.2015 திருத்தம் : 03.10.2015

புதியவை / Recent Articles