பூமி

Øresund Bridge,the amazing bridge-tunnel that connects Sweden and Denmark

ஆதாரம்

ஒரேஸண்ட் (Øresund) நீரிணை டேனிஷ் தீவான‌ ஸீலாந்தை (Zealand ) தெற்கு ஸ்வீடிஷ் மாகாணமான‌ ஸ்கேனியாவைச் (Scania) சேராமல் பிரிக்கின்றது. அதன் அகலம் 4 கிலோமீட்டர் (2.5 மைல்). இந்த‌ ஸ்காண்டினேவிய‌ நாடுகள் (டென்மார்க் & ஸ்வீடன்) அவைகளின் மகாணம் மற்றும் தீவுகளை இணைக்க‌ பிரம்மாண்டமான‌ சுரங்கப்பாதையை தாங்கிய‌ பாலத்தினை கட்டி முடித்தனர்.

ஒரேஸண்ட் பாலம் (Øresund Bridge) டேனிஷ் பொறியியல் நிறுவனம் COWI ஆல் வடிவமைக்கப்பட்டது மற்றும் அதன் முக்கிய கட்டடக் கலைஞர் ஜார்ஜ் கே.எஸ் ரோட்னி இரு நாடுகளுக்காகவும் பணிபுரிந்தார். Øresund பாலம் ஸ்வீடிஷ் கடற்கரையில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்) ஆகும். பாலம் நீரிணை மத்தியில் அமைந்துள்ள பெபர்ஹாம் (Peberholm) செயற்கை தீவுக்குச் இணைக்கப்பட்டுள்ளது. பின் நீரிணை குறுக்கே அடுத்த‌ 4 கிமீ (2.5 மைல்) நீருக்கடியில் சுரங்கப்பாதையைக்கொண்டு (Drogden Tunnel) பெபர்ஹாம் (Peberholm) தீவிலிருந்து டானிஷ் தீவான‌ அமேகர் (Amager) அடைந்து முற்றுபெறும்.

மனிதனால் உருவாக்கப்பட்ட‌ பெபர்ஹாம் (Peberholm) தீவு கண்னைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. இத்தீவானது கடல் அடியிலிருந்து தூர் வாரிய பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது. தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் சுதந்திரமாக உலாவும் இந்த‌ தீவு உயிரியலாளர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. 500 க்கும் மேற்பட்ட தாவரங்கள் பல்வேறு இனங்கள், மற்றும் பறவைகளின் உறைவிடமாகவும் உள்ளது.