திகிலூட்டும் கண்ணாடி பாலம் சீனாவில் திறக்கப்பட்டது

Terrifying glass-bottomed bridge opened in China's Shiniuzhai National Geological Park

ஆதாரம் யூட்யூப் வீடியோ

சீனாவிலுள்ள‌ ஹுனான் மாநிலத்தின் ஷினூஷாய் (Shiniuzhai) தேசிய புவியியல் பூங்காவில் உள்ள‌ பள்ளத்தாக்கின் மேலே அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி பாலம் திறந்துவைக்கப்பட்டது. பள்ளத்தாக்கின் தரைமட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்தில் மேலே பணியப்பட்ட‌ இந்த‌ கண்ணாடி அடிபாகத்தினைக்கொண்ட‌ பாலம் சுமார் 300 மீட்டர் (300 metres) நீளம் கடந்து செல்ல‌ உருவாக்கப்பட்டதாகும்.

சீன‌ மொழியில் ஹவுஹன் கியூஓ (Haohan Qiao) என‌ பெயரிடப்பட்ட‌ இந்த‌ பாலத்தின் பெயர் ஆங்கிலத்தில் "Brave Men's Bridge" (துணிச்சலான‌ ஆண்களின் பாலம்) என‌ பொருள் தருகின்றது.

உலகின் முதன்முதல், முழுமையாக‌ ஊடுருவும் கண்ணாடியுடன் (transparent glass) அமைக்கப்பட்ட‌ நீளமான‌ மற்றும் உயரமான‌ பாலமாகும். முன்னதாக‌ மரத்தினால் உருவாக்கப்பட்ட‌ இந்த‌ பாலமானது பின்னர் கண்ணாடியால் வடிவமாற்றம் பெற்றது. 24மிமீ தடிமன் கொண்ட‌ கண்ணாடி பலகங்களால் சாதாரணக் கண்ணாடிகளை விடவும் 25 மடங்கு வலிமையான‌ கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டு பரத்த‌ப்பட்டது. இந்த‌ கண்ணாடி பாலம் பலத்த காற்று, பூகம்பம், பனி மற்றும் 800 பார்வையாளர்களின் எடையை தாங்கும் சக்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாள் : 01.10.2015 திருத்தம் : 03.10.2015

புதியவை / Recent Articles