பிரம்மாண்டமான படிக்கட்டு ! சாரக்கட்டு !!

Gigantic Scaffold Staircase. Built In Rotterdam as a part of Rotterdam’s 75th anniversary and Opened To Public

இதுபற்றிய‌ பக்கம் யூடியூப் வீடியோ (காணொளி)

Gigantic Staircase with scaffolding in Rotterdam.

A gigantic and scaffold built staircase was built in Rotterdam city as a part of Rotterdam’s 75th anniversary to celebrate the city’s reconstruction after World War II. The staircase is fully functional with 180 steps.

கம்பிகளாலான‌ சாரத்தின் மேல் (சாரக்கட்டு / Scaffolding ) பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட‌ இந்த‌ படிக்கட்டுகள் ஹாலந்தின் (Holland) ரோட்டர்டாமில் (Rotterdam) கட்டப்பட்டது. கற்பனையில் உருவாகி குறையின்றி வடிவமைக்கப்பட்ட இந்த‌ பிரமிக்கும் படிக்கட்டுகளை கட்ட‌ எண்ணக்கருவினைக் கொண்ட‌ நிறுவனத்தின் பெயர் "MVRDV".

ரோட்டர்டாம் நகரின் 75 வது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நகரின் புனரமைப்பினைக் (city’s reconstruction after World War II) கொண்டாடுவதற்கு இந்த‌ பிரம்மாண்ட‌ மாடி படிக்கட்டு (Staircase) உருவாக்கப்பட்டது.

இந்த‌ பிரம்மாண்ட‌ மாடி படிக்கட்டு பார்வைக்காக‌ மட்டிமல்ல‌ !!.இது மக்கள் ஏறிச்செல்லவும், இறங்கவும் நடமாட்டத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்ற‌து.

மொத்தம் 180 படிகள் கொண்ட‌ இந்த‌ மாடிப்படிக்கட்டு ரோட்டர்டாம் நகரின் மையத்தில் அமையப்பெற்ற‌ மற்றும் நன்கு அறியப்பட்ட நினைவுச்சின்னமான‌ "Groothandelsgebouw (குரூத்தேண்டஸ்ஜிபோவ்) " கட்டிடத்தின் மேல்கூரைவரை (roof) அழைத்துச் செல்லும்.இக்கட்டிடத்தின் மேற்கூரையினில் நின்று ரோட்டர்டாம் நகரை முழுவதுமாக‌ பல‌ கோணங்களில் (panaromic view) பார்க்க‌ முடியும்.


நாள் : 25.05.2016 திருத்தம் : 25.05.2016

புதியவை / Recent Articles