நெகிழ்வு தன்மையுள்ள‌ கான்கிரீட் கண்டுபிடிப்பு

ConFlexPave-new-bendable-concrete
Technology

ConFlexPave - new bendable, kightweight, tougher concrete

Flexible ConFlexPave concrete is tougher, thinner and lighter than conventional mixtures.

Scientists at Singapore’s Nanyang Technological University recently developed a new concrete mixture, ConFlexPave - stronger than traditional concrete but also flexible. ConFlexPave’s strength and flexibility is the polymer microfiber it contains, which allows the slabs to bend under pressure without cracking.

ஒரு கட்டிடம் காலாகாலத்திற்கு நிலைத்து நிற்க‌ கான்கிரீட்(Concrete) மிக‌ முக்கியம். அதுபோல தரமான சிமென்ட்டில் ஆனவைவே நிலைத்து நிற்கும். தற்போதைய‌ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் கான்கிரீட் கட்டமைப்புகள் (Traditional Concrete Structures) வலிமை மிக்கனவாக இருந்தலும் உயர் அழுத்தத்தினால் (pressure) அல்லது காலனிலை காரணமாக‌ வெடிக்கவோ அல்லது நொறுங்கவோ கூடும்.

இச்சவாலினை கருத்தில் கொண்டு வளையும் தன்மை கொண்ட‌ கான்கிரீட் கற்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட‌ சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக (Nanyang Technological University ) ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். NTU-JTC தொழிற்துறை உள்கட்டமைப்பு இன்னோவேஷன் மையத்தில் ( NTU-JTC Industrial Infrastructure Innovation Centre (I³C) at NTU Singapore.) பணிபுரியும் ஒரு குழுவின் கண்டுபிடிப்புதான் கான்பிளக்ஸ்பேவ் (ConFlexPave) கான்கிரீட் கலவை.

கான்பிளக்ஸ்பேவ் (ConFlexPave mixture) கலவையிலிருந்து தயாரிக்கப்பட்ட‌ கான்கிரீட்கள் காலமாற்றம் மற்றும் உயர் அழுத்தத்தினால் விரிசல் (cracks), உடைதல் அடைகின்ற‌ வழக்கமான‌ கான்கிரீட்கள் போலல்லாமல் அவற்றின் நெகிழ்வு பண்புகளால் நிலைத்து நிற்கும். கான்பிளக்ஸ்பேவ் (ConFlexPave) இல் இருந்து தயாரிக்கப்படும் கற்பலகைகளை (ஸ்லேப்), புதிய சாலைகள், பார்க்கிங், மற்றும் பிற நடைபாதை பரப்புகள் ஏற்புடுத்த‌ பயன்படுத்தும் போது பாதி நேரத்திலேயே எளிதில் வேலைகளை முடிக்க‌ உதவுகிறது.


நாள் : 20.08.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles