ஆப்பிளின் புதிய 'ஸ்பேஸ்ஷிப்' வளாகம் 4K வீடியோ காட்சி

Apple’s new ‘Spaceship’ campus, 4K drone footage. watch now

ஆப்பிளின் புதிய 'ஸ்பேஸ்ஷிப்' வளாகத்தின் கட்டுமான‌ பணி எதுவரை நிறைவடைந்துள்ளது என்பதைப் பற்றி ஆளற்ற விமானத்தினால் (டிரோன்) எடுக்கப்பட்ட‌ 4K வீடியோ காட்சியைப் பாருங்கள்.

2013 ஆம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ள‌ ஆப்பிளின் புதிய 'ஸ்பேஸ்ஷிப்' வசதியானது 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்பிளின் பிரமாண்டமான பணித்திட்டமானது 176 ஏக்கருக்கு அதிகமான‌ மற்றும் 2.8 மில்லியன் சதுர அடி பரப்புடைய‌ பெருமையினைக் கொண்டது.

ஒரு மைல் அளவிற்கு அதிகமான‌ பரப்பினையுடைய‌ 'ஸ்பேஸ்ஷிப்' வசதி 13,000 க்கும் மேற்பட்ட ஆப்பிள் ஊழியர்களின் இல்லத்திற்கான அமைவிடமாக‌ உள்ளது. கூரை மீது காண‌ப்படும் சோலார் பேனல்கள் கட்டிடப் பணி நிறைவடையும் வேளையில் மேற்கூரையினை அலங்கரிக்கும். சுய‌ ஆற்றல் வசதியுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்பேஸ்ஷிப் கட்டிடமானது அதன் கூரையில் சுமார் 500,000 சதுர அடியில் சூரிய ஓடுகள் பதிக்கப்பட்டு முடிவுறும். சுமார் 5 மெகாவாட் சூரிய‌ மின்சக்தி உற்பத்தி செய்யும் திறன்கொண்ட‌ சூரிய ஓடு கூரையானது உலகின் மிகப்பெரிய சூரிய நிறுவல்களில் ஒன்றாகக் கூடும்.
.

>

ஆப்பிளின் புதிய‌ வளாகத்தில் சொந்த உணவு தயார் செய்வதற்கு மரங்களை வளர்க்க‌ திட்டமிட்டுள்ளது. வெளியே, நூற்றுக்கணக்கான செர்ரி, சர்க்கரை பாதாமி, பிளம், ஆலிவ் , மற்றும் ஆப்பிள் மரங்களை வளர்க்க‌ திட்டமிட்டுள்ளது.

உண்மையில் ஒரு கட்டிட‌க்கலை அற்புதமாக‌ விளங்கும் ஆப்பிள் ஸ்பேஸ்ஷிப் கட்டிடத்தைப் பார்க்க‌ பணி முடிவுபெறும் வரை காத்திருக்க முடியாது. என்றாலும், ஆளற்ற விமானமான‌ டிரோன் எடுத்துக்கொண்ட‌ காட்சிகளை வைத்து இந்த‌ பிரம்மாண்ட‌ கட்டிடத்தின் சிறப்பினை அறிந்து கொள்ளுங்கள்.

நாள் : 17.12.2016 திருத்தம் : 17.12.2016

புதியவை / Recent Articles