கட்டிக்கொண்டவளும் பயந்து விலகுவாள் (பஜ கோவிந்தம் 6) : யாவத் பவனோ நிவசதி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே சுலோக‌ வரிகள். Yaavatpavano nivasati dehe taavatprichchhati kushalam gehe- Bhaja Govindham Sloka Lyrics 06 - Tamil Lyrics

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே

கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

பொருள்

எது வரையில் உடம்பில் மூச்சுக் காற்று இருக்கிறதோ அது வரையில் தான் உன் வீட்டில் இருப்பவர்கள் உன் நலன்களைப் பற்றி விசாரிப்பார்கள். உடலை விட்டு அந்த மூச்சுக் காற்று போன பின்னால் இது நாள் வரை பல முறை அந்த உடலுடன் கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்