நடுக்கம் வந்த பின் நலம் விசாரிக்கவும் நாதி இல்லை (பஜ கோவிந்தம் 5) : யாவத் வித்தோ பார்ஜன சக்த: தாவன் நிஜ பரிவாரோ ரக்த: சுலோக‌ வரிகள். Yaavadvittopaarjana saktah staavannija parivaaro raktah- Bhaja Govindham Sloka Lyrics 05 - Tamil Lyrics

யாவத் வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த:

பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே

பொருள்

எது வரை பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும் பின்னர் வலிவிழந்த நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்