நீரில்லை என்றால் பறவைகள் இல்லை; பணம் இல்லை என்றால் பரிவாரம் இல்லை (பஜகோவிந்தம் 10): வயஸி கதே க: காம விகார: சுஸ்கே நீரே க: காசார: சுலோக‌ வரிகள். Vayasigate kah kaamavikaarah shushhke niire kah kaasaarah - Bhaja Govindham Sloka 10 Lyrics - Tamil Lyrics

வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: காசார:

க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்ஸார:

பொருள்

இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்? நீர் நிலைகளில் நீர் வற்றிப் போனால் எங்கே போயின நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும்? செல்வம் அழிந்து போனால் எங்கே போனார்கள் நம் நண்பர்களும் உறவினர்களும்? உண்மைப் பொருளை அறிந்து கொண்ட பின் எங்கே போனது என்றும் மாறும் நிலையுடைய இந்த சம்ஸாரம்?

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்