ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
சத்சங்கத்தால் ஜீவன்முக்தி (பஜகோவிந்தம் 9) : ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் சுலோக வரிகள். Satsangatve nissngatvam
nissangatve nirmohatvam - Bhaja Govindham Sloka 9 Lyrics - Tamil Lyrics
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:
பொருள்
அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் இவர்களின் கூட்டு, பற்று இல்லாத நிலையை அளிக்கும். பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும். மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும். அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்