காலம் விளையாடுகிறது வாழ்நாளோ தீர்கிறது (பஜகோவிந்தம் 12) : தின யாமின்யௌ சாயம் ப்ராத: சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத: சுலோக‌ வரிகள். dinayaaminyau saayam praatah shishiravasantau punaraayaatah
kaalah kriidati gachchhatyaayuh tadapi na mujncatyaashaavaayuh sarvam - Bhaja Govindham Sloka 12 Lyrics in Tamil - Bhaja Govindham Tamil Lyrics

தின யாமின்யௌ சாயம் ப்ராத:
சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:

கால: க்ரீடதி கச்சதி ஆயு:
தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:

பொருள்

பகலும் இரவும்,மாலையும் காலையும், வாடையும் கோடையும் மீண்டும் மீண்டும் வருகின்றன. காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது. வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் என்ன ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்