வீட்டில் மகா சொர்ணகர்ஷண பைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தை கட்டாயம் வைக்க வேண்டும். இந்த சுவாமி படங்களை எல்லாம் வைத்து பூஜிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தினமும் ஒரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரத்தை உச்சரிப்பதால் நம்மிடம் பொருளும், செல்வமும் தானாக தேடிவரும்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் | Swarna Akarshana Bhairava Gayathri Manthiram
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம் | Swarna Akarshana Bhairava Maha Manthiram
ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ
லட்சுமி கடாக்ஷத்தை அருளும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள்
ஒருவருக்கு செல்வ செழிப்பை வழங்கக்கூடியவர்கள் அஷ்ட லட்சுமிகள், லட்சுமி தேவி, குபேர மந்திரங்களை நாள் தோறும் உச்சரித்து வர வேண்டும். அல்லது மகானான திருமூலம் கூறியது போல, “ஓம் ஐஸ்வரரேஸ்வராய நம” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். மல்லிகைப் பூ போட்டு அர்ச்சனை செய்து உச்சரிக்கவும்.
நாம் வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாகப் பணம் வைக்கக்கூடிய பீரோ, கடையில் இருக்கும் கல்லாப்பெட்டிக்கும் மல்லிகைப்பூ வைத்து வழிபட வேண்டியது கட்டாயம். மல்லிகைப் பூ லட்சுமி தேவிக்கு விருப்பமானது. பணத்தை ஒருவரிடம் நாம் கொடுக்கும் போது அதன் தலைப் பகுத் நம்மிடம் இருக்குமாறு வைத்து கொடுக்க வேண்டும்.
உங்கள் கருத்து : comment