வெளியிட்ட தேதி : 07.12.2016
above 5000 e-payments mandatory
Commerce

Indian Finance Ministry declared for all Government Bodies that all payments above Rs.5000 must be Made through e-payment

ம‌த்திய நிதியமைச்சகம் இனிமுதல் 5000 ரூபாய்க்கும் அதிகமான காசு பரிமாற்றத்தினை மின்னணு முறையில் செய்யப்பட வேண்டும் என அனைத்து அரசு அமைப்புகளுக்கும் அறிவித்துள்ளது. அமைச்சகம் இதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரவும் அறிவித்துள்ளது.

கடந்த‌ நவம்பர் 8 ம் தேதியன்று 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனிச் செல்லாதவை எனும் அறிவிப்பை தொடர்ந்து, இந்திய‌ அரசாங்கம் டிஜிட்டல் பரிமாற்றங்கள் ஊக்குவிக்கும் (promote digital transactions) நடவடிக்கைகளை பெருமளவிற்குப் எடுத்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் பண‌ பரிமாற்ற‌ வரையறை அளவை 10,000 ரூபாயாக நிர்ணயம் செய்யாததும் குறிப்பிடத்தக்கது. தற்போது டிஜிட்டல் முறை பரிமாற்றத்தின் அளவைப் பாதியாகக் குறைத்துள்ளது.

திங்கட்கிழமையன்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இனிமுதல் அரசு அமைப்புகள், விற்பனையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய தொகை 5000 ரூபாயைத் தாண்டினால் மின்னணு முறையில் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்யவேண்டும். பணமாக அளிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை களையறுக்கவும், ஒரு பணமில்லா பொருளாதாரம் கொண்டுவரவேண்டுமெனும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடுமையான‌ ஆலோசனையின்படி, சமீபத்திய நடவடிக்கைகளை அத்திசையில் நகர்வு பெறுகின்றன‌. இது நாடு முழுவதிலும் டிஜிட்டல் மயம் ஆக்கபடும் வேண்டுமெனும் இந்திய‌ அரசாங்கத்தின் முன்னேற்ற நடவடிக்கையின் ஒருபகுதி ஆகும்.

இப்புதிய அறிவிப்பின் மூலம், அரசு அமைப்புகள் மத்தியில் 100 சதவீத டிஜிட்டல் பண‌ பரிவர்த்தனையை நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டமாக அமைந்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.