வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! வரமருளும் அப்பனே வந்தருள்வாய்! ஐயப்பன் பாடல் வரிகள்.Vantharulvai ayyane vantharulvai ! varamarulum appane vantharulvai Swami Ayyappan Devotional songs Tamil Lyrics
வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்!
வரமருளும் அப்பனே வந்தருள்வாய்!
வற்றா அமுத ஊற்றே வந்தருள்வாய்!
வினை தீர்ப்பவனே வந்தருள்வாய்!
உலகாளும் காவலனே வந்தருள்வாய்!
ஊழ்வினை அழிப்பவனே வந்தருள்வாய்!
எருமேலி வாசனே வந்தருள்வாய்!
எங்கள் சாஸ்தாவே வந்தருள்வாய்!
சதகுரு நாதனே வந்தருள்வாய்!
சகல கலை வல்லோனே வந்தருள்வாய்!
கலியுக வரதனே வந்தருள்வாய்!
கற்பூரப் பிரியனே வந்தருள்வாய்!
குகன் சகோதரனே வந்தருள்வாய்!
கும்பேஸ்வரன் குமரனே வந்தருள்வாய்!
இரக்கம் மிகுந்தவனே வந்தருள்வாய்!
இருமுடிப் பிரியனே வந்தருள்வாய்!
மணிகண்டப் பொருளே வந்தருள்வாய்!
ஐயன் ஐயப்ப சாமியே வந்தருள்வாய்!
உங்கள் கருத்து : comment