நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை

வெளியிட்ட தேதி : 30.11.2017

நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை - கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Nei Manakkum Ayyan Malai Nenjamellam Inikkum Malai Sabarimalai - K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

நெய் மணக்கும் ஐயன் மலை
நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை

மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
சபரிமலை அபயமலை
சபரிமலை அது அபயமலை
சபரிமலை அபயமலை
சபரிமலை அது அபயமலை
சபரிமலை அது அபயமலை

வேண்டியதைக் கொடுக்கும் மலை
வேந்தனது சாந்த மலை
ஆண்டவனும் ஜோதியாக
காட்சி தரும் காந்த மலை
ஆண்டவனும் ஜோதியாக
காட்சி தரும் காந்த மலை
ஆண்டுக்காண்டு அழைக்கும் மலை
நம்மை மீண்டும் போகத் தூண்டும் மலை
ஆண்டுக்காண்டு அழைக்கும் மலை
நம்மை மீண்டும் போகத் தூண்டும் மலை
ஆனந்தம் காணும் அழகு மலை
ஐயப்பன் ஆலயம் கொண்ட மலை

நெய் மணக்கும் ஐயன் மலை
நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை
சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை

சித்தர்களும் சூளும் மலை
பக்தர்களும் கூடும் மலை
முக்தி தரும் தேவன் மலை
சக்திபீடம் கொண்ட மலை
முக்தி தரும் தேவன் மலை
சக்திபீடம் கொண்ட மலை
கற்பூரம் ஜொலிக்கும் மலை
களபம் மணம் வீசும் மலை
கற்பூரம் ஜொலிக்கும் மலை
களபம் மணம் வீசும் மலை
அற்புதமாய் ஐயப்பன் அருளாட்சி புரியும் மலை
அற்புதமாய் ஐயப்பன் அருளாட்சி புரியும் மலை

நெய் மணக்கும் ஐயன் மலை
நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை
மேன்மைதரும் தெய்வமலை
மணிகண்டன் வாழும் மலை
சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை
சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை
சபரிமலை அது அபயமலை

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.