கருணையோடு அணைக்கின்ற கையேது

வெளியிட்ட தேதி : 23.11.2016

கருணையோடு அணைக்கின்ற கையேது - கொடும் காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது - கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Karunaiyodu anaikkindra kai edhu - kodum kaattil namai - K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

கருணையோடு அணைக்கின்ற கையேது - கொடும்
காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது (கருணை)

பம்பையாற்றில் புனிதமான குளிரேது - நமை
பாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏது
ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)

பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது - நோன்பால்
பக்தரை சுவாமியாக்கும் உருவமேது (பந்தளத்)

சம்சாரக் கடலினிலே தோணியேது
சம்சாரக் கடலினிலே தோணியேது
பாவ சுவடுகளைச் சுட்டெரிக்கும் அக்னியேது
ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)

ஜாதிமத பேதமில்லா சமத்துவ தீபம் - காட்டி
மனிதர்களை புனிதராக்கம் மகர தீபம் (ஜாதி)

சைவ வைஷ்ணவங்கள் ஒன்றாய் இணைத்து சேர்க்கும்
மகா சன்னிதானம் சானித்ய மனதில் சேர்க்கும்
ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.