இதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை

வெளியிட்ட தேதி : 29.11.2017

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா - கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Idhayam entrum unakkaka Ayyappa Un pathamalare thunai - K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

நிதமும் உந்தன் நாமம் சொல்வேன் ஐயப்பா
உனை நினைந்து நினைந்து உருகிட வேண்டும் ஐயப்பா

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

கேரள பாண்டிய இராஜகுமாரா சரணம் ஐயப்பா .... ஐயப்பா
நாரண சங்கரன் மகிழும் செல்வா சரணம் ஐயப்பா .. ...ஐயப்பா

ஆரதமுதம் நீ பேரழகன் நீ
ஆரியங்காவில் வாழ்பவனும் நீ

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

அபயம் தந்திட சபரிமலை உண்டு ஐயப்பா
ஆறுதல் கூறிட உன் அருள் உண்டு ஐயப்பா

வேதமும் நாடும் வினைகளும் ஓடும்
எங்கள் நாவும் பாடும் ஞானமும் கூடும்

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா

பண்ணமுதம் தந்தவனே சரணம் ஐயப்பா .... ஐயப்பா
கண்ணழகு கொண்டவனே சரணம் ஐயப்பா .... ஐயப்பா

விண்ணவரின் கண்மணியே சரணம் ஐயப்பா
எண்ணமதில் வந்திடுவாய் சரணம் ஐயப்பா

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா ....
உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா ...

ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.