Enna Varam Ketpen Naane | என்ன வரம் கேட்பேன் நானே

வெளியிட்ட தேதி : 21.11.2021

Enna Varam Ketpen Naane manam makizhnthu Arulum Sabareeshwarane

என்ன வரம் கேட்பேன் நானே மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே, -கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Enna Varam Ketpen Naane manam makizhnthu Arulum Sabareeshwarane (Ayyappan Song) from Sarana Tharangini - K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

சாமியே சரணம் ஐயப்பா!
என்ன வரம் கேட்பேன் நானே
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
என்ன வரம் கேட்பேன் நானே?
என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
புகழை நான் வேண்டவா,
பொருளை நான் வேண்டவா……,
புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,
நல்ல பண்பை நான் வேண்டவா,
இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!
என்ன வரம், வேறென்ன வரம்
என்ன வரம், கேட்பேன் நானே,
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே…!

வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகணும்
சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியணும்
கடலுக்குள் நான் பிறந்தால்
முத்துக்கள் சேர்க்கணும்…..
முத்துக்கள் கோர்த்து
வந்து ஐயனுக்கு சூட்டணும்,
மனிதனாகப் பிறந்து விட்டேன்,
எப்படி நான் வாழணும்?
ஆ........
மனிதனாகப் பிறந்து விட்டேன்,
எப்படி நான் வாழணும்?
இசை என்னும் மந்திரக்கோலால்
மதங்களை நான் சேர்க்கணும்.
மதங்கள் எனும் மலைகள்,
ஜாதி எனும் தடைகள் கடந்திட
ஐயன் உன் அருளினை நான் பெறணும்.
என்ன வரம், வேறென்ன வரம்
என்ன வரம், கேட்பேன் நானே,
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே…!
முடிப்பு
பறவையாக நான் பிறந்தால், கருடனாக ஆகணும்
திருவாபரணப்பெட்டி மேலே
காவலுக்குப் போகணும்
மலராக நான் பிறந்தால், கமலமாகப் பூக்கணும்
ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டணும்
காற்று மண்டலத்தில் எங்கும்
உன் புகழைப் பாடணும்
ஆ.....
காற்று மண்டலத்தில் எங்கும்
உன் புகழைப் பாடணும்
பேரசை என்றபோதும் ஐயன் நிறைவேற்றணும்:
மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்
தொடர்ந்திட ஐய்யன் இரு திருவடி சரணம்!
என்ன வரம் கேட்பேன் நானே
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,
நல்ல பண்பை நான் வேண்டவா,
இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!
என்ன வரம், வேறென்ன வரம்
என்ன வரம் கேட்பேன் நானே
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே

சாமியே சரணம் ஐயப்பா!

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கேள்வி / கருத்து : What's your comment/opinion, please

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.
Connect with us