தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன் அரிஹரன் மைந்தனை ஐயப்பன் பாடல் வரிகள். Dharisanam Kanden Paravasam Konden- K. Veeramani Ayyappa song Tamil Lyrics
தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன்
அரிஹரன் மைந்தனை சபரிமலை தன்னில் (தரிசனம்)
தர்மத்தை காக்கவே தரணியில் பிறந்தவனை ஆ...ஆ...
கர்மவினை தீர்க்கும் கருணையில் சிறந்தவனை
வைதாலும் அவர் வாழவழி காட்டும் மன்னவன் (தரிசனம்)
வாயார வாழ்த்தி நின்றால் வந்தருள் செய்பவன்
மெய்யப்பன் ஐயப்பன் மேன்மை தரும் பாடல்
தையினில் ஜேததியாய் திகழ்ந்திடும் நாதனை (தரிசனம்)
ஐந்து மலைக்கரசன் ஐந்தெழுத்தானவன்
ஐயங்கரன் தம்பியவன் ஐஸ்வர்யதாயகன்
சிந்தையில் நின்றாடும் பந்தள பாலகன்
சிம்மையன் எம்மையன் சுகம் தரும் நாயகனை (தரிசனம்)