ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் - அதை

வெளியிட்ட தேதி : 10.01.2015

ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் - அதை சொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம், கே. வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Ayyappan Naamam enakku Jeeva manthiram Tamil Ayyappan Songs Lyrics by K. Veeramani

மந்திர கோஷப்பிரியனே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் - அதை
சொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம் (ஐயப்பன் நாமம்)

காடும் மலையும் கடக்கவைக்கும் ஐயப்பன் நாமம்
களைப்பில்லாமல் நடக்க வைக்கும் ஐயப்பன் நாமம்
பாடுவோர்க்கு பலனளுக்கும் ஐயப்பன் நாமம்
பக்கத்துணையாயிருக்கும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்)

தேனைப் போலத் தித்திக்கும் ஐயப்பன் நாமம்
தெய்வ நலம் கூடவைக்கும் ஐயப்பன் நாமம்
மோனத்தவ நலம் சேர்க்கும் ஐயப்பன் நாமம்
முக்திதரும் சித்திதரும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்)

சபரிமலை ஐயப்பா சஞ்சலத்தை மாற்றப்பா
அபயம் தரும் ஐயப்பா ஆறுதலை அருளப்பா
கருணை உள்ள ஐயப்பா கைகொடுத்து உதவப்பா
அருள் உருவே ஐயப்பா ஆதரிப்பாய் ஐயப்பா (ஐயப்பன் நாமம்)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.