UberWeddings uber cabs
Automobiles & Technology

Wedding Transport Solution : Uber launches wedding transport services in India

உபர் இந்தியாவில் திருமண போக்குவரத்து சேவைகளைத் தொடங்குகிறது. உபர் இந்தியாவில் 12 நகரங்களில் திருமண உபகரண வழங்கல் போக்குவரத்து சேவைகளை UberWEDDINGS என்ற‌ பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்க‌ட்டமாக‌, அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, ஹைதெராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, லூதியானா, புது தில்லி, புனே, உதய்பூர் மற்றும் லக்னோ ஆகிய‌ நகரங்களில் சேவைகளைத் துவங்கியுள்ளது.

இதற்காக‌ வெட்மீ குட் (WedMeGood) எனும் திருமண திட்டமிடல் இணையதளம் (a wedding planning portal) உடன் கொகோர்த்துள்ளது. UberWEDDINGS விளம்பர குறியீடுகளை வாங்குவதாலும் (buying promo codes ) அல்லது சவாரிகளை பிரித்துகொண்டு திருமண‌ நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் ம‌ற்றும் திருமண திட்டமிடல் செயல்களை புரியும் நபர்களுக்காகவும் பகிர்ந்தளிக்கப்படும்.

உபர் கூறுகிறது : அதன் கல்யாண‌ சவாரிகளை பணமில்லாம‌ல் அமைத்துக்கொள்ள முடியும் மற்றும் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட வரவு செலவு திட்ட (பட்ஜெட்) அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும். மேலும் சவாரிகள் பேச்லர் பார்ட்டி / பேச்லரெட் பார்ட்டி போன்ற‌ விருந்துகள் ம‌ற்றும் இரவு உணவு போன்ற (Uber cabs for bachelor/ette parties and dinner) திருமண தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்த முடியும் என்று உபர் கூறுகிறது.

மேலும் உபர் நிறுவனம் தேவைக்கேற்ப‌ திருத்தியமைக்கப்பட்ட விளம்பர குறியீடுகளை (customised promo codes) உருவாக்கி கோரிக்கை விடுத்த‌ மூன்று அலுவலக‌ நாட்களுக்குள் அச்சிட்டு வழங்கும்.

UberWEDDINGS ஏற்கனவே, அமெரிக்க வாஷிங்டன் DC, சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், பாஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற‌ நகரங்களில் சேவைகளைச் சிறப்பாக‌ வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

UberWEDDINGS 'இந்தியாவில் அறிமுக செய்யப்படுவது அர்த்தமுள்ள விஷயமாகும். மட்டுமல்ல, உபர் புதுவாகனங்களையும் இதற்காக‌ ஒதுக்க‌ முடியும். எல்லோரும் கல்யாண‌ விஷயங்களை ஏற்பாடு செய்யும் வேளையில், உபரின் சேவையானது கவனிப்பு வேலைகளை எளிதாக்க‌ கூடும்.