Full self-driving Tesla car
Automobiles

Full self-driving Tesla car coming by the end of 2020 - Elon Musk

டெஸ்லா கார் என்றால் பலரையும் பைத்தியமாக ரசிக்கவைக்கும். இதற்கு டெஸ்லா கார் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளதே முக்கிய காரணமாகும். அது மட்டுமல்ல, இந்த கார்கள் தானாகவே ஓட்டுவதற்கும், பாதைகள் மாறும் மற்றும் வாகனம் ஓட்டுகையில் பாதுகாப்பாக இருப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகின்றன.

ARK Invest உடனான நேர்காணலில், எலோன் மஸ்க் கூறுகையில், முழுமையான தன்னியக்க சுய-ஓட்டுநர் செயல்பாடு கொண்ட டெஸ்லா கார் (Full self-driving Tesla car) 2019 ஆம் ஆண்டின் முடிவில் தயாராகி அதற்கு அடுத்த ஆண்டு விற்பனையும் துவங்கும் என உறுதி அளித்துள்ளார். அதிநவீன மிகவும் மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த காரில், நீங்கள் உங்கள் வழிப்பாதையை அமைத்து, ஒரு குட்டி தூக்கம் போட்டு, பின் குறிப்பிட்ட இலக்கு / இடத்தில் எழுந்திருக்கும் அளவிற்கு தன்னியக்கம் கொண்டிருக்கும்.

I think we will be ‘feature complete’ with the new self-driving this year. This implies that the car will be able to find you in a parking lot, pick you up, take you all the way to your destination without intervention this year, says Elon Musk.

அனைத்து டெஸ்லா கார்களும் தன்னியக்க ஓட்டுநர் வன்பொருளுடன் விற்கப்படும், ஆனால் நீங்கள் 'மேம்படுத்தப்பட்ட Autopilot' வசதி பெற விரும்பினால் கூடுதலாக $ 5,000 கொடுக்க வேண்டும் (அல்லது அது மென்பொருள் வழியாக தடைசெய்யப்பட்டிருக்கும்). Autopilotஇன் தற்போதைய நிலையில், நெடுஞ்சாலையில் இணைய அல்லது விட்டுச் செல்ல அல்லது பாதையை மாற்றும் போது உங்கள் கார் உங்களுக்குத் தெரிவிக்கும். புதிய மேம்படுத்தல் செய்துகொண்டால், கார்கள் தங்களை நிறுத்திக் கொள்ளலாம், குழப்பமான நெடுஞ்சாலை குறுக்கீடுகளை கையாளலாம், மற்றும் சேவை சாலைகளில் எளிதாக இயங்கும்.

தன்னியக்க சுய-ஓட்டுநர் செயல்பாடு கொண்ட டெஸ்லா கார்கள் சாலைகளை பாதுகாப்பானதாக்கும், அதிகபடியான டெஸ்லா கார்கள் சிறந்ததாகவும், ஒன்றொடொன்று இணைக்கப்பட்டதாகவும் மென்பொருளுடன் தொடர்புகொண்டு ஏற்படும் முன்னரே விபத்துகளை தடுக்கவும் செய்யும். இது எதிர்கால சாலை போக்குவரத்து ஆக இருக்கும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.