Automobiles

Land Rover puts Tile app with touchscreen panel in 2017 SUV editions

Land Rover's 2017 Discovery Sport can tell when you've misplaced tagged items behind and locates them on a map.

The Land Rover Discovery Sport car will be the world’s first integration of Tile App in its Touchscreen. Tile app, an advanced tracking app uses Tile tags, tiny Bluetooth trackers that can be attached to important items owned by us for daily use. Working in conjunction with InControl apps, Tile alerts drivers when tracking the left items behind.

லேண்ட் ரோவர் (Land Rover) தன‌து டிஸ்கவரி ஸ்போர்ட் SUVயில் தவறவிட்ட‌ பொருட்களை கண்டறியும் ப்ளூடூத் தொழில்நுட்பத்தினை (Bluetooth technology) பொருத்துகிறது. லேண்ட் ரோவர், டைல் இன்க் (Tile Inc) நிறுவனத்தின் டைல் (Tile) பயன்பாட்டினை உபயோகித்து சாவி, பணப்பைகள், போன்கள், லேப்டாப் (மடிக்கணினிகள்- Laptops) என நாம் தவறவிட்ட‌ அல்லது மறந்துவிட்ட‌ பொருட்களை கண்காணித்து ப்ளூடூத் உதவியுடன் கண்டுபிடிக்க‌ உதவுகிறது.

டைல் (Tile) ப்ளூடூத் கண்காணிக்கும் பயன்பாடு செயல்படுவதற்கு டைலினை டேகு (Tag) செய்ய வேண்டும். இதற்கு உங்களது பொருட்களின் உள்ளே நீங்கள் காசு கொடுத்து வாங்கிய‌ டைல்கள் (Tile tags) இருக்க‌ வேண்டும். டைல்கள் ஒரு சிறிய‌ தீப்பட்டி அள‌வினைக் கொண்டது. ஆன்லைனில் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

Land Rover dashboard with Tile app in discovery SUVs

இந்த‌ டைல் ஆப் வசதியால் காரின் உள்ளே இருக்கும் பொருட்களை அடையாள‌ம் கண்டு ஒரு 90 டி.பி. எச்சரிக்கை ஒலி எழுப்பி காண்பித்துக் கொடுத்துவிடும். 2017ல் வெளிவரும் டிஸ்கவரி ஸ்போர்ட் (Discovery Sport) SUV எடிசன்களிl (மாடல்) ஒரு 21:9 அம்ச விகிதம் (aspect ratio) கொண்ட‌ 10.2 அங்குல தொடுதிரை (Touch screen) வசதி விருப்பத்தேர்வைக் கொண்டு வெளியாகின்றன‌. இந்த‌ தொடுதிரையினில் டைல் (Tile) உள்ளிட்ட பல‌ பயன்பாடுகளை (Apps) கட்டுப்படுத்த‌ முடியும். மேலும் இது பயணிகளுக்கு பெரிய‌ காணும் திரையாகவும், டிரைவருக்கு பயன்பாடுகளைக் கட்டுப்படுத்தும் திரையாகவும் இருக்கும் டுயல் ஸ்கீரீனாக‌ (dual-screen) விளங்கும்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.