Transformer-car-built-by-Turkish-engineers
Automobiles & Technology

Real life Transformer built by Turkish engineers with BMW-red car

டிரான்ஸ்பார்மர் என்றழைக்கப்படும் (Transformers) இயந்திரங்களை நாம் ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். என்ன‌ அற்புதம் !! இப்போது அதுபோன்ற‌ ஒரு செயல்படும் டிரான்ஸ்பார்மரை (functional Transformer!) நிஜமாகவே உருவாக்கியுள்ளனர் துருக்கிய பொறியாளர்கள்.

துருக்கிய நிறுவனம் லெட்ரான்ஸ் (Letrons), இந்த‌ அறிவியல்-புனைவு நிகழ்வை தங்களது சிவப்பு BMW டிரான்ஸ்பார்மர் (BMW-Transformer) கொண்டு நனவாக்கியுள்ள‌து

இக்கார் டிரான்ஸ்பார்மரால் பறக்கவோ, சுடவோ முடியாது. ஆனால் கார் பயன்முறையில் (Car mode) ரிமோட் கன்ட்ரோல‌ருடன் (Remote Controller) காரினை ஓட்ட‌ முடியும். பல‌ அற்புதமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட‌ இந்த‌ கார் டிரான்ஸ்பார்மர், கார் ஆர்வலர்கள் மற்றும் கார் உரிமையாளர்களுக்கும் ஆர்வத்தினை தூண்டும் விஷயமாகும்.

இது பற்றிய‌ வீடியோவினைப் பாருங்கள்.

ஒரு 200 Ncm DC செர்வோ மோட்டர் (servo motor) தலையினை 120 டிகிரிக்கு திருப்ப‌ உதவுகிறது. 1.000N ஆக்சிவேட்டர் கழுத்து மற்றும் உடலினை இணைக்கின்றது.

மாறும் கழுத்து இயக்கங்கள் 100 N actuator உடன் இயக்கப்படுகிறது.

முக்கிய கட்டுப்பாட்டு யூனிட் ரோபோ போன்ற உருமாற்ற செயல்பாடுகளை கையாளுவதற்கும், நிற்வகிக்கவும் விசேஷ வடிவமைப்புடன் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு 35,000 N பிரதான‌ ஹைட்ராலிக் சிலிண்டர் அமைப்பு மற்றும் கூடுதல் ஹைட்ராலிக் இணைப்புகளால் ஆன‌ முதுகெலும்பு அமைப்பு வேகமான மற்றும் பயனுள்ள உருமாற்றத்தினை அனுமதிக்கின்றது.

Wi-Fi, தொழில்நுட்பம்: 2.4 GHz, 54 Mbps வேகமான‌ தரவு பரிமாற்ற விகிதம் மற்றும் 5dBi ஆண்டெனா கவரேஜ்.

400 NMC செர்வோ எஞ்சின் வலிமையுடன் தனித்தனியாக நகரும் விரல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒலி சுற்றுச்சூழல் காரணிகளை ஒருங்கிணைக்கும், ஒரு குரல், ஒலி உணர்திறன். LED அடிப்படையிலான வடிவமைப்பு இயங்குநிலை கண் அமைப்பு (dynamic eye system) மற்றும் ஒளி ஸ்பெக்ட்ரம் ஆகியவை சிறந்த ஆற்றல்மிக்க‌ காட்சியினை அளிக்கின்றது.

இது பற்றிய‌ வீடியோவினைப் பாருங்கள்.