Hyperloop Transit tubes
Technology

Dubai's new ultra-fast Hyperloop train travels from Dubai to Abu Dhabi in 12 minutes

அமெரிக்க நிறுவனம் ஹைப்பர்லூப் ஒண் (Hyperloop One) எமிரேட்சின் துபாய் (Dubai) உடன் 500mph வேகத்தில் செல்லக்கூடிய‌ ரயில் மற்றும் பாதையைக் கட்டமைக்க‌ ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த‌ இரயிலில் வெறும் 12 நிமிடத்தில் 150 கி.மீ தூரத்திற்குப் பயணம் செய்ய‌ முடியும்.

புது ஹைப்பர்லூப் இரயிலினால் ஐக்கிய அரபு எமிரேட்சின் இரு முக்கிய நகரங்களுக்கு இடையேயான‌ எரிச்சலூட்டக்கூடிய‌ இரண்டு மணி நேர போக்குவரத்தினை முடிவுக்குக் கொண்டு வர‌ முடியும். துபாய் மற்றும் அபுதாபி இடையேயான‌ புதிய அதிவேக போக்குவரத்து (high-speed transport systems) இணைப்பு இரண்டு நகரங்களுக்கும் இடையே பயண நேரத்தினை (reduces travel time) கணிசமாக குறைத்துவிடும்.

கலிபோர்னியா (California) சார்ந்த நிறுவனம் ஹைப்பர்லூப் ஒண் (Hyperloop One), துபாய் அதிகாரிகள் (Dubai Authorities) உடன் கலந்து, உலகின் உயரமான கட்டிடமான‌ பூர்ஜ் கலிபாவின் (The world'a tallest Burj Khalifa) மேல் வைத்து ஒப்பந்தத்தினை இந்த வார தொடக்கத்தில் கையெழுத்திட்டனர்.

திட்டங்கள் மேலே செல்லுமானால், ஹைப்பர்லூப் (Hyperloop) மின்காந்த தொழில்நுட்பத்தை (Hyperloop Electro-magnetic technology) பயன்படுத்தி, சக்கரமில்லாத காப்ஸூல் வடிவுபெற்ற‌ கலன்கள் (capsule like vessels) குறைந்த அழுத்த இடைவழிகொண்ட‌ குழாய்கள் (Low-pressure transit tubes) வழியே அதிக வேகத்தில் பயணம் செய்ய அனுமதிக்கின்ற‌ போக்குவரத்து முறை அதன் வகையில் உலகில் முதல் ரயில் போக்குவரத்தாகும்.