ஜோதிடம்

ரிஷப‌ இராசி அன்பர்களுக்கான‌ ஜய‌ வருட‌ சனிப் பெயர்ச்சிப் பலன்கள் , 2014 ஆம் ஆண்டு ‍முதல் 2017 வரை

ரிஷப‌ இராசி

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2014 முதல் 2017 வரை

கார்த்திகை 2,3,4, பாதங்கள் ரோகிணி 1,2,3,4 பாதங்கள் மிருகசீரிடம் 1,2, பாதங்கள் வரை


ரிஷப‌ இராசி அன்பர்களே நவம்பர் மாதம் 1-ம்தேதியன்று சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்துக்கு வருகிறார். இந்த சஞ்சாரம் 2 1/2 வருடங்களுக்கு இருக்கும். இதனை ‘கண்டகச் சனி’ என்பார்கள். இந்த 2 1/2 வருடங்களுக்கு நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.

வீரியம் பெரிதா காரியம் பெரிதா என்று யோசிக்கும் போது காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். என்றாலும் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தள்ளிப் போகும். ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் வரும் சின்ன சின்னப் பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது.

கண்டகச் சனியால், சனி அசுப பலன்களைக் கொஞ்சம் அதிகமாகவே தருகின்றார். இருக்க இடமின்றி, ஒரு குறிக்கோளின்றி, பல இடத்திலும் அலைந்துகொண்டே இருப்பார். இது சமயம் வெளிதேச வாசமும் இவருக்கு ஏற்படும். ஆனால், அங்கும் இவருக்குப் பலவித கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். 7-ல் சனி எல்லா வகையிலும் அசுப பலன்களையே தருகின்றார்.

முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பாருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!

சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘பீஜ மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளிலும், மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.