ஜோதிடம்

விருச்சிக‌ இராசிக்கு மாறும் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் , 2014 ஆம் ஆண்டு ‍முதல் 2017 வரை

சனீஸ்வரர் நீதி நேர்மையை நிலை நாட்டி, ஏழை செல்வந்தன் என்கின்ற‌ பாகுபாடில்லாது தன் கடமையைச்செய்து, அனைவரையும் "தாம் தாம் செய்த‌ தவறுகளுக்காக‌ வருத்தி, தவறினை உணர்த்தியும்" பலன்களை வழங்குகின்றவர். ஒருவர் தான் செய்த‌ தவறுகளைத் திருத்திக் கொண்டால் அவர்களுக்கு தன் கருணையினைப் பொழிகின்றவர். நீதி நேர்மையென்று வாழ்கின்றவர்களுக்கு அவர் அள்ளிக்கொடுப்பவர். கொடும் செயல்கள் புரிபவர்களை அவர் தண்டிக்கின்றார்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி நிகழ்ந்துக் கொண்டிருக்கின்ற‌ ஜய‌ வருடத்தில், மார்கழி மாதம் 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16 .12 . 2014 அன்று மதியம் 2.16 மணிக்கு விசாக‌ நட்சத்திரம் 4ஆம் பாதத்தில், துலாம் இராசியிலிருந்து விருச்சிக‌ இராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.