கி.பி 365 இல் சுனாமி!!. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு!
கிட்டத்தட்ட 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுனாமியினால் மூழ்கடிக்கப்பட்ட நீரோட்ட நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜூலை 21, கி.பி 365 ல் ஏற்பட்ட பூகம்பத்தால் ரோமானிய நகரம் நேபோலிஸ் (The Roman city called Neapolis) பயங்கரமான சுனாமியினால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டது ( washed away by a very strong tsunami ).
Tunisian National Heritage Institute மற்றும் இத்தாலியில் உள்ள Sassari பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். கடலுக்கடியில் இடிபாடுகளாக காணப்படும் இந்த நகரமானது சுமார் 50 ஹெக்டேர்களூக்கு அதிகமான பரப்பளவினைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
50 ஏக்கர் பரப்பளவில், மிஞ்சிய வீதிகள், நினைவுச்சின்னங்கள், கரம் தயாரிக்க பயன்பட்ட பல தொட்டிகள் (garum என்று அறியப்படும் ‘Rome’s Ketchup’, பண்டைய ரோம் மற்றும் கிரேக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான மீன் சாஸ் ஆகும்) ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நகரம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இன்று, நீருக்கடியில் காணப்படும் நகரம் சரியாக துனிசியாவின் வடகிழக்கில் உள்ள சுற்றுலா இடமான நபேக் (Nabeuk in the north-east of Tunisia) அருகில் அமைந்துள்ளது.