வெளியிட்ட தேதி : 23.08.2016
bosnian-pine-tree-old-living-tree
சுற்றுச்சூழல்

At 1075 years old, this might be the oldest living tree in Europe

1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த‌ போஸ்னியன் பைன் (Bosnian pine) மரம் ஐரோப்பாவின் பழமையாக‌ வளர்ந்துவரும் உயிருள்ள‌ மரமாகும் என‌ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வடக்கு கிரேக்கத்தில் (northern Greece) அமைந்துள்ள இந்த‌ பைன் மரம் வளரும் ஒவ்வொரு ஆண்டில் உருவாகும் வளையத்தின் என்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.

Bosnian pine (Pinus heldreichii) எனும் இம் மரம் கிறிஸ்துக்கு பின் 941ம் ஆண்டளவில் இருந்து காணப்படுகின்றதாக அவர்கள் கருதுகின்றனர். மேலும் 941ஆம் ஆண்டு, வைக்கிங் இனத்தினர் வ‌டக்கு ஐரோப்பாவில் சுற்றித்திரிந்த‌ காலகட்டத்தில் இம்மரம் சிறு நாற்றாக‌ இருந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட போது இதன் காலம் சுமார் 250 ஆகும் என‌ கண‌க்கிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்டாலும் இது உலகின் நீண்ட‌ காலம் வாழும் மரம் (worlds oldest living tree) அல்ல‌. மெத்தூசலா (Methuselah) என்ற, பழமையான தனிப்பட்ட குளோனிங் இல்லாத‌ ம‌ரம், டாக்டர் எட்மண்ட் ஷூல்மன் (Dr Edmund Schulman ) கண்டறிந்தார். 1957 ல் தேதியிடப்பட்ட‌ இமரத்திற்கு வயது 4,600 ஆகும். இதுவே உலகின் நீண்டகாலம் வாழும் மரமாகும்.

ஐரோப்பாவின் குளோனிங் செய்யப்பட்ட (ச்லொனெட் ட்ரே) மிகப் பழமையான மரம் - கிட்டத்தட்ட 10,000 ஆண்டு வாழ்ந்து வருகிறது -இது ஸ்வீடன் (Sweden) இல் உள்ளது. பிரிட்டனின் பழமையான மரம் பெர்த்ஷையரில் (Perthshire) உள்ளது. குளோனிங் செய்யப்பட்ட யூ மரத்தின் (yew tree) வயது 5000 ஆண்டுகள் .

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.