வெளியிட்ட தேதி : 29.01.2013
ஆன்மீகம்

Abhirami Anthathi in Tamil

 1. கோமள வல்லியை அல்லியந்தாமரைக் கோயில்வைகும்
  யாமள வல்லியை ஏதமிலாளை எழுதரிய
  சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்
  ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் அதிபரே
  96
 2. :பதவியும் புகழும் பெற….

 3. ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன்
  போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
  காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்
  சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தைலையே.
  97
 4. :தர்மங்கள் செய்து பலன்பெற …..

 5. தைவந்து நின்அடித் தாமரை சூடிய சங்கரற்கு
  கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே
  மேய்வந்த நெஞ்சின்அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
  பொய்வந்த நெஞ்சில் புகஅறியா மடப் பூங்குயலே.
  98
 6. :பிறர் வஞ்சனையால் பதிக்கபடதிருக்க…

 7. குயிலாய் இருக்கும் கடம்ப அடவியிடைக் கோல இயல்
  மயிலாய் இருக்கும் இமய சலத்திடை வந்துதித்த
  வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
  கைலாயருக்கு அன்றுஇமவான் அளித்த கனங்குழையே.
  99
 8. : மனதில் அருள்தன்மை வளர…

 9. குழையைத் தழுவிய கொன்றையந்தார்கமழ் கொங்கைவல்லி
  கழையைப் பொருத திருநேடுந்தோளும் கருப்புவில்லும்
  விழியைப் பொருதிறல் வேரியம் பானமும் வேண்ணகையும்
  உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிகின்றவே.
  100
 10. :அம்பிகையை மனதில் தரிசிக்க

 11. ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டம்எல்லாம்
  பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவி அடங்கக்
  காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை
  சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

  :நூற் பயன்

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.