வெளியிட்ட தேதி : 29.01.2013
ஆன்மீகம்

Abhirami Anthathi 91-95 Songs

 1. மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்
  புல்லிய மென்முலை பொன்னனையாளைப் புகழ்ந்து மறை
  சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழும் அவர்க்குப்
  பல்லியம் ஆர்த்தொழ வெண்பகடு ஊரும் பதம் தருமே.
  91
 2. :அரசாங்க அனுகுலம் பெற…

 3. பதத்தே உருகிநின் பாதத்திலே மனம் பற்றி உன்றன்
  இத்ததே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான்ஒருவர்
  மதத்தே மதிமயங் கேன் அவர் போனவழியும் சொல்லேன்
  முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.
  92
 4. : மனப்பக்குவம் உண்டாக….

 5. நகையே இக்திந்த ஞாலம்எல்லாம் பெற்ற நாயகிக்கு
  முகையே முகிழ்முளை மானே முதுகண் முடிவில் அந்த
  வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும்நாம்
  மிகையே இவள்தன் தகைமையே நாடி விரும்புவதே.
  93
 6. :உள்ளத்தில் நிறைவு உண்டாக…

 7. விரும்பித் தொழும் அடியார்விழிநீர்மல்கி மெய்புளகம்
  அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
  சுரும்பிர் களித்து மொழிதடுமாறி முன்சொன்ன வெல்லாம்
  தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம்நன்றே.
  94
 8. :மனதார வழிபட்டுப் பலன் பெற….

 9. நன்றே வருகினும் தீதே விளைகினும் நான்அறிவது
  ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்குள்ளவெல்லாம்
  அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாத குணக்
  குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.
  95
 10. :தூய மனநிலை பெற…

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.