வெளியிட்ட தேதி : 29.01.2013
ஆன்மீகம்

Abhirami Anthathi 81-85 Songs

 1. அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
  வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
  இனங்கேன்எனதுன தென்றிருப்பார் சிலர் யாவரோடும்
  இனங்கேன் அறிவொன்றிலேன் என் கண் நீவைத்த பேரொளியே
  81
 2. : நன்னடத்தை உண்டாக….

 3. அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
  ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
  களியாகி அந்த கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
  வெளியாய்விடின் எங்ங்னேமறப்பேன்நின் விரகினையே
  82
 4. : மனம் ஒருமைப்பட…..

 5. விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
  இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
  பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
  உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே.
  83
 6. :பலர்க்குத் தலைமை ஏற்க….

 7. உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்
  சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
  இடையாளை எங்கள் பெம்மானிடையாளை இங்கென்னை இனிப்
  படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.
  84
 8. :இக்கட்டுகள் நீங்க …..

 9. பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வாண்டு
  ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் ஏன் அல்லல்எல்லாம்
  தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
  வார்க்குங் குமமுலையும் முலைமேல் முத்து மாலையுமே.
  85
 10. :அல்லல் எல்லாம் அகல….

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.