அபிராமி அந்தாதி பாடல் 76-80 அந்தாதிகள்
- குறித்தேன் மனதில்நின் கோலம்எல்லாம்நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப் பிரான்ஒரு கூற்றைமெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பான பயிரவியே.76 - பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயர்ஆவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புரவே.77 - செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியன் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.78 - விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.79 - கூட்டிவா என்னைத் தன் அடியாரில் கொடியவினை
ஓட்டியவா என்கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிகின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.80
: சிறந்த ஆற்றல் பெற….
: கன்னிகைகளுக்கு நல்ல வரன் கிட்ட….
: பயம் அகல….
:நல்லோர் நட்பு கிட்ட…
:மனமகிழ்ச்சி நிலைக்க…
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.