வெளியிட்ட தேதி : 29.01.2013
ஆன்மீகம்

Abhirami Anthathi in Tamil

 1. வல்லபம் ஒன்றறியேன் சிறியேன்நின் மலரடிச் செம்
  பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
  வில்லவர் தம்முடன் விற்றிருப்பாய் வினையேன்தொடுத்த
  சொல் அவமாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.
  66
 2. :இசைபாடும் ஆற்றல் பெற…

 3. தோத்திரம் செய்து தொழுதுமின்போலும் நின் தோற்றம்ஒரு
  மாத்திரை போதும் மனத்தில்லை யாதுஅவர் வண்மைகுலம்
  கோத்திரம் கல்வி குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும்
  பாத்திரம் கொண்டு பலிக்குழலாநிற்பர் பார்எங்குமே
  67
 4. :பயம் நீங்க…

 5. பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
  ஊரும் முருகு சுவைஒளி ஊரொளி ஒன்றுபடச்
  சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
  சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.
  68
 6. :செல்வங்கள் பெருக….

 7. தனம்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
  மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
  இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
  கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
  69
 8. :சகல செளபாக்கியங்களும் பெருகிட…

 9. கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம் பாடடவியல்
  பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
  மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
  பெண்களில் தோன்றிய எம்பெருமாடிதன் பேரழகே.
  70
 10. :கலைகளில் தேர்ச்சி பெற…

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.