அபிராமி அந்தாதி பாடல் 61-65 அந்தாதிகள்

Abhirami Anthathi in Tamil

 1. நாயேனையும் இங்கொருபொருளாக நயந்து வந்து
  நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
  பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன்
  தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கைச்சியே.
  61
 2. : உண்மை உணர்வு உண்டாக….

 3. தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
  வெங்கண் கரிஉரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடைக்
  கொங்கைக் குறும்பைப் குறியிட்ட நாயகி கோகனகச்
  செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே.
  62
 4. :பயங்கள் விலக….

 5. தேறும் படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
  கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும்சமயம்
  ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
  வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.
  63
 6. :நல்லறிவு உண்டாக….

 7. வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
  பூணேன் உனக்கன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சியன்றிப்
  பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசமன்றிக்
  காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.
  64
 8. :இறை பக்தி பெருக…

 9. ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
  தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
  முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
  மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே.
  65
 10. :மழலை செல்வம் பெற…

Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment