அபிராமி அந்தாதி பாடல் 51-55 அந்தாதிகள்
- அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண் அன்றழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.51 - வையகம் துரகம் மதகிரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.52 - சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முளையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துக்
தன்னந் தனியிருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே.53 - இல்லாமை சொல்லி ஒருவர்தம்பாற் சென்றிழிவு பட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
சொல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.54 - மின்னாயிரம் ஒரு மேய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னா தொழியினும் உன்னிலும் வேண்டுவது ஒன்றில்லையே.55
:வாழ்வில் சிறக்க….
:செல்வம் உண்டாக….
: தவம் கைகூடிட…
:கடன்கள் பைசலாக….
:விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த…
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.