வெளியிட்ட தேதி : 29.01.2013
ஆன்மீகம்

Abhirami Anthathi in Tamil

 1. வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
  பொறுக்கும் தகமை புதியதன்றே புது நஞ்சை உண்டு
  கருக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
  மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே.
  46
 2. : தீய பழக்கங்கள் விலகிட….

 3. வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
  வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலைநிலம்
  ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
  சூழும் சுடர்க்கு நடுவே கிடந்தது சுடர்கின்றதே.
  47
 4. :யோகசித்தி பெற…

 5. சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
  படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
  இடரும் தவிர்த்து இமைப் போதிருப்பார் பின்னும் எய்துவரோ
  குடரும் கொழுவும் குருதியும் நோயும் குரம்பையிலே.
  48
 6. : உடல்பற்று நீங்க…

 7. குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
  வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
  அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்
  நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே
  49
 8. : யம பயம் நீங்க…

 9. நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
  சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
  வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்
  றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
  50
 10. :அம்பிகையின் தரிசனம் பெற…

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.