அபிராமி அந்தாதி பாடல் 31-35 அந்தாதிகள்
- உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.31 - ஆசைக் கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின்பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே.32 - இழைக்கும் வினைவழியே அடும்காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அந்தர் சித்தர் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போழுதுன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே33 - வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவோடு தான் போய் இருக்கும் சதுர்முகம்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.34 - திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கொரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி ஆணை மேல் துயில் கூறும் விழுப்பொருளே.35
: மறுமையில் இன்பம் உண்டாக..
:அம்பிகை ஆசி பெற்றிட….
:அன்னையின் நினைவு அகலதிருக்க….
:இறையார்க்கு உதவிட..
:கடிமணம் நிகழ…
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.