அபிராமி அந்தாதி பாடல் 26-30 அந்தாதிகள்
- ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும்படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே.26 - உடைத்தனை வஞ்சப் பிறவி உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே.27 - சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியாத அரசும்
சொல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.28 - சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முக்தியும் முக்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.29 - அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கினி நான் ஏன் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே
ஒன்றே பலவுருவே அருவே என் உமையவளே.30
:வாக்கில் வன்மையும் செல்வாக்கும் பெற்றிட…..
:அம்பிகை அருள்பெற்றிட ….
: சகல சுகங்களும் பெற….
:சகலகாரிய சித்தி பெற….
:மறுமையில் இன்பம் உண்டாக..
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.