கொலோசியம் ரோமானியர்களால் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், அடிமைகளிடையேயும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட வட்டவடிவ அரங்கம் ஆகும். கூரையற்ற‌ இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சிகள் நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையிலும் சண்டை பயங்கரமாக‌ நிகழும். இவ்வகை கட்டிடங்கள் அம்ஃபிதியேட்டர் (amphitheatre) என்றழைக்கப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்று பொருள்படும்.