பைஸெப்ஸ்(இருதலைத்தசை ) மற்றும் டிரைஸெப்ஸ்(முத்தலைத்தசை) என்பது கைகளில் காணப்படும் தசைகளின் பெயர்களாகும்.

பைஸெப்ஸ் கைகளின் முன் பகுதியில் காணப்படும். கைகளை மடக்கும் போது உருளை வடிவத்தினை கொடுக்கும்.
டிரைஸெப்ஸ் கைகளின் பின் பகுதியில் காணப்படும். கைகளை நேராக‌ வைத்து, பலத்துடன் முறுக்கும் போது காணப்படும்.

இயல்பாகவே இவை கைகளின் முன்புற‌ மற்றும் பின்புற‌ அசைவிற்கு ஏற்ப‌ விரிவடைந்தும் சுருங்கியும் தோற்றம் அளிக்கும். இத்தசைகளை ஜிம்மிற்குசென்று தனிப்பட்ட‌ பயிற்சியினை செய்யும் போது அவை அழகிய‌ முறுக்கேறிய‌ வடிவம் பெறுகின்றன‌.