பிராணயாமா எனும் சமசுகிருத சொல், "பிரானா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்" என்று பொருள். இது, "பிராணா" வாழ்வாற்றல் அல்லது முக்கியமான வலிமை குறிப்பாக மூச்சோட்டம் மற்றும் "ஆயாமா" நிறுத்தி வைத்தல் அல்லது கட்டுப்படுத்தி வைத்தல் என்று இருசொற்களால் உருவாக்கப்பட்டப் பொருள்.

ஒரு மனிதனின் ஆயுட்காலம் அவன் உள் இழுத்து வெளியில் விடும் மூச்சின் வேகத்தை பொருத்து கணக்கிட‌ முடியும். பொதுவாக மனித உயிர்கள் ஒரு நிமிடத்தில் 16 தடவை மூச்சை உள் இழுத்து வெளியே விடுகின்றன. இதே மூச்சை இன்னும் குறைவாக பயிற்சியின் மூலம் அடக்கினால், 8 தடவை உள் இழுத்து வெளியில் விடும்போது ஒருவருடைய ஆயுள் காலத்தில் 2 நிமிடங்கள் அதிகரிக்க படுகின்றன. குறைவான தடவை மூச்சை உள் இழுத்து வெளியில் விட்டாலும் உடம்புக்கு தேவை ஆன சத்துக்கள் உடலுக்கு செல்வதில் எந்த தடையும் இருக்காது.

முற்காலத்தில் நம் முன்னோர்கள் அமைதியான ஆரவாரம் இல்லாத வாழ்வை வாழ்ந்து கொண்டு இருந்தனர். அதனால் அவர்கள் ஒரு நிமிடத்திற்கு 11 லிருந்து 12 தடவை மட்டும் மூச்சை உள் இழுத்து வெளியில் விட வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் அவர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய பரபரப்பான சூழலில் நாம் நிமிடத்திற்கு 16 தடவையும் அதற்கும் மேலும் மூச்சினை உள் இழுத்து வெளியில் விட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அதனால் இப்போது மனிதர்களின் வாழ் நாள் குறைந்துவிட்டது.

மூச்சு விடல் பற்றியான பிராணயாமா பயிற்சியில் 4 நிலைகள் உள்ளன.

  1. முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதை பூரகம் என்று பெயர்.
  2. இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.
  3. இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.
  4. வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதை பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று கூறுவர்.
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.