வெளியிட்ட தேதி : 24.12.2013

பழங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு மிக முக்கியமானவை ஆகும். பழங்கள் ஊட்டச்சத்து மிககனவாககும்.பழங்களிலிருந்து பெறப்படும் பழச்சாறு மிகவும் ருசிக்கத்தக்க‌ மற்றும் தாகத்தினைப் போக்கும் எளிய‌ உணவாகும்.

சரி, நாம் சுகாதரமான‌ பழங்களை சாப்பிடுகிறோமா?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல‌ என்பது போல‌ மஞ்சள் நிறமுடையவையெல்லாம் தூய்மையான‌, சுகாதரமான‌ பழங்கள் அல்ல‌".

நச்சுத்தன்மை

பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என எண்ணம் கொள்ள‌ வேண்டாம். அது சில நேரங்களில் தவறானதாகும் வாய்ப்புள்ளது. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கடினமான காரியம்.

இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' அதிகமாக‌, நன்கு பழுத்த பழம் போல, மக்களை கவரும் இரசாயன முதிர்ச்சி பெற்ற‌ பழங்கள் மிக விஷமானவை. பழமண்டிகள் (அ) கிடங்குகளில் வாழை, பலா,பப்பாளி, கொய்யா,சீதாப்பழம்,மாங்காய்களை குவியல் குவியலாக கொட்டி , அக்குவியலுக்குள்ளே சிறு துளையிட்ட பாலித்தீன் பைகளில் கால்சியம் கார்பைடு கற்களைப் (Calcium Carbide) போட்டு வைத்து விடுவார்கள் . கால்சியம் கார்பைடில் ஆர்சனிக் , பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும் . இது மிகவும் நச்சுத் தன்மை உடைய இரசாயனமாகும் . கால்சியம் கார்பைடிலிருந்து (Calcium Carbide) வெளிவருகிற அசெட்டிலின் வாயு காய்களின் மீது பரவி , பழுத்தது போன்ற போலியான‌ தோற்றத்தை உண்டாக்கும் . ஆனால் , உண்மையில் இரசாயன முதிர்ச்சியுற்ற‌ பழங்கள் உள்ளுக்குள் பழுத்திருப்பதில்லை. இதனால்தான் வாழைப்பழங்களும், மாங்கனிகளும் இனிப்பதில்லை, மாறாக‌ சக்கை போன்று சுவைய்ற்றவையாகின்றன‌. ஏனடா ?, இதை போய் வாங்கினோம் என்று மனதிற்குள் எண்ண‌ தோன்றும்.

செயற்கையாக பழுக்க வைத்த பழங்கள் கண்பார்வையால் எளிதாக‌ கண்டறிய முடியாது என்பதால், அத்னை வாங்கும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ருசித்து பார்த்து பழுத்ததற்கேற்ற இனிப்பு இருந்தால் மட்டுமே வீட்டு உபயோகத்துக்கு வாங்கலாம், அல்லது வீட்டில் நேரடியாக விளைவதை வாங்கி சாப்பிடலாம். சந்தையில் சில வருடங்களாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம், மாம்பழங்களையும் கொய்யா,பப்பாளி திராட்சைகளையும் கூட பரவலாக விறபனை செய்யப்பட்டு வ‌ருகிறது. ஆகையினால் நாம் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருத்தல் வேண்டும்.

விளைவுகள்

ஒரு பழத்தில் என்ன‌ ஆகப்போகிறது என‌ மெத்தனமாக‌ இருந்தால் விளைவுகள் பயங்கரமானதாக‌ இருக்கும். வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்கத்தக்கது. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும். ஏழைகளின் உணவு என்றும் சொல்லுவர். ஆனால் சந்தையில் கார்பைட் கற்களால் பழுக்க‌ வைத்த‌ பழங்கள் மிகுதியாகக் காண‌ப்படுகின்றன‌.

நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு, நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க போதுமானது என்றால் எவ்வளவு பெரிய கொடிய நச்சினையுடய‌ உணவினை நாம் இது வரை உட்கொண்டிருக்கிறோம் என விளங்கும். இப்பழங்களை உண்போருக்கு வயிற்றுப்போக்கு, பேதி, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

கால்சியம் கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம் பாதிக்கும் . இதனால் முதுமைத் தோற்றம் , இதய நோய் , புற்று நோய் கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ENGLISH HINTS

Fruit ripening using calcium carbide

Most climacteric fruits in India are ripened with industrial grade calcium carbide. Industrial-grade calcium carbide usually contains traces of arsenic and phosphorus, and, thus, use of this chemical for this purpose is illegal in most countries. In India too, use of calcium carbide is strictly banned as per PoFA (Prevention of Food Adultration) Act [Section 44AA]. Calcium carbide, once dissolved in water, produces acetylene which acts as an artificial ripening agent. Acetylene is believed to affect the nervous system by reducing oxygen supply to brain. Arsenic and phophorus are toxic and exposure may cause severe health hazards.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.