தேவையான‌ பொருட்கள்

பாசுமதி அரிசி1 கப்
கெட்டித் தயிர்1 கப்
நெய்6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்1/2 டீ ஸ்பூன்
பனீர்100 கிராம்
பிரிஞ்சி இலை 4
உப்பு11/2 டீ ஸ்பூன்
தேங்காயத் துருவல்6 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்2
இஞ்சி விழுது1/2 டீ ஸ்பூன்
பூண்டு4 பற்கள்
தக்காளி2
பீன்ஸ்8
கேரட்1
காலிபிளவர் 8 சிறிய பூக்கள்
நூல்கோல்1
கிராம்பு (வறுத்து அரைக்க)2
பட்டை (வறுத்து அரைக்க)1 சிறிய துண்டு
சோம்பு (வறுத்து அரைக்க)1 டீ ஸ்பூன்
சீரகம்1 டீ ஸ்பூன்
கசகசா (வறுத்து அரைக்க)1 டீ ஸ்பூன்
வற்றல் மிளகாய் (வறுத்து அரைக்க)4
பச்சை மிளகாய் (வறுத்து அரைக்க)2

எப்படி செய்வது

  1. முதலில் பாசுமதி அரிசியைக் 1 கப் தண்­ணீரில் ஊற வைக்கவும்.

  2. சிறிது நெய்யில், அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் (மேலே அட்டவணையில்) பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.

  3. மீதியுள்ள நெய்யை ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்..

  4. வதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.

  5. தண்­ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரில் வேக‌ வைக்கவும். 2 விசில் விட்ட‌ பிறகு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.

*நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகித்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.