தேவையான‌ பொருட்கள்

பனீர் அரைகிலோ
உருளைக்கிழங்கு 3
மைதா 6 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 3
மல்லித்தழை அரைக்கட்டு
வெந்தையக்கீரை 1 கட்டு
கரம்மசாலா 1 டீஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
ரஸ்க் தூள் அரை கப்
உப்பு, எண்ணெய் தேவையான‌ அளவு

எப்படி செய்வது

  1. முதலில் பனீரை உதிர்த்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்துக் கட்டியில்லாமல் மசியுங்கள்.

  2. பச்சை மிளகாய், மல்லித்தழை,வெந்தையக்கீரை ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக‌ நறுக்குங்கள்

  3. பனீர், உருளைக்கிழங்கு, 3 டேபிள் ஸ்பூன் மைதா, நறுக்கிய‌ மல்லி, வெந்தையக்கீரை, ப.மிளகாய், கரம் மசாலா , எலுமிச்சம்பழச்சாறு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசையுங்கள்

  4. மீதமுள்ள‌ 3 டேபிள் ஸ்பூன் மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து, வேண்டிய‌ வடிவத்தில் செய்து, மைதாவில் நனைத்து, ரஸ்க் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுங்கள். சுடச்சுடச் சாப்பிட்டு மகிழுங்கள்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.