வெளியிட்ட தேதி : 27.03.2014

இடம்
திருவஞ்சிக்குளம் மஹாதேவர் ஆலயம், மேதலா, கொடுங்கல்லூர், திருச்சூர், கேரளம்.
இறைவனின் பெயர்
ஸ்ரீ மஹாதேவர் , ஸ்ரீ Anjaikalatheeswarar
தேவியின் பெயர்
ஸ்ரீ உமையம்மை
திருவிழாக்கள்

கோயிலின் வருடாந்திர‌ திருவிழா மலையாள‌ மாதமான‌ கும்ப‌ மாதத்தில் (பெப்ரவரி = மார்ச்) நடைபெறுகிறது. எட்டு நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா கடல் ஆறாட்டுட‌ நிறைவு பெறும். ஆனையோட்டம் பிரசித்தி பெற்றது. சிவராத்திரி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

கொடுங்கல்லூர் KSRTC பேருந்துகளாலும், தனியார் பேருந்துகளாலும் போக்குவரத்து சேவைகளைக் கொண்டுள்ளது. கோச்சி நகரம் (35 km), திருச்சூர் (38 km) and குருவாயூர் (45 km) தொலைவில் உள்ளது. கொடுங்கல்லூர் அருகில் கொச்சி விமான‌ நிலையமான‌ நெடும்பசேரி சர்வதேச‌ விமான‌ நிலையம்(Nedumbassery International Airport at Kochi) 35 கி.மீ தொலைவில் உள்ளது.

அருகில் உள்ள‌ இரயில் நிலையம் : இருஞ்சலகுடா, கொடுங்கல்லூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது.

தரிசன‌ நேரம்

காலை 05 மணி முதல் முற்பகல் 11.00 வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி

திருவஞ்சிக்குளம் ( ஆங்கிலம்: Thiruvanchikulam )அல்லது வஞ்சி, கேரளாவின் கொடுங்கல்லூரை அடுத்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நகராகும். இது 12வது நூற்றாண்டுவரை சேர மன்னர்களின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் கொச்சி இராச்சியத்தின் அரசாட்சியில் இருந்தது. இங்குள்ள மகாதேவசுவாமி ஆலயம் சுந்தரர் பாடிய தலமாகும்.இக்கோவில் சிதம்பரம் கோவிலுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது..

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.